கே.வி.குப்பம் அருகே செயின் பறிப்பு- ஒருவர் கைது!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மூலகாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (70), மேல்மாயில் கிராமத்தில் உள்ள கெங்கை அம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் ராஜாமணியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். புகாரின் பேரில் செயினை திருடிய ராஜ்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

