புளியங்குடியில் குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

புளியங்குடியில் குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
X
குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருணாசலவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி. விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (28), மகள் பவித்ரா, மகன் முகில் (10 மாதம்). இந்நிலையில், வெண்ணிலா மகன் முகிலை தனது உடலுடன் சோ்த்துக் கட்டிக் கொண்டு, புளியங்குடியிலிருந்து மணக்குடையாா் கோயில் செல்லும் சாலை அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
Next Story