கோவை: ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டாக்கள்: பயணி கைது !

X
கோவை விமான நிலையத்தில் நேற்று அபுதாபி செல்ல வந்த சிபு மேத்யூ என்ற பயணியின் ஷூவின் அடியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் சோதனையில் பிடிபட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளத்தின் பரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. துப்பாக்கி தோட்டாக்கள் எதற்காக அவர் எடுத்துச் சென்றார்? உரிமம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இதேபோன்று ஒரு பெண் பயணியிடமும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story

