கோவை: கனமழை - வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

X
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வால்பாறை தாலுகாவிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 16 ஆம் தேதி (இன்று) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. மழையால் சாலைகள் சில இடங்களில் வெள்ளத்தில் மூழ்கி போயுள்ளன. பள்ளி செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்து பயணிப்பது உள்ளிட்ட சிக்கல்களைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். மழை தொடரும் பட்சத்தில் தொடர்ந்து விடுமுறை வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. பெற்றோர் மற்றும் மாணவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story

