பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது

X
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சிறப்பு கூட்டம் கூட்டத்தலைவர் ஜோஸ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் ஷிபு, பொருளாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் ரமேஷ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலக்சாண்டர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், 2024-25 கல்வி ஆண்டில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கருங்கல் ஆர்.சி. தெருவை சார்ந்த ஜெய்சன் மேத்யூ மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ரிஷியா ஜானு ஆகியோருக்கு மீனவர் திலகம் விருதும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க தலைவர் ராயப்பன், சமூக ஆர்வலர் கிறிஸ்டோபர் ஆகியோர் வழங்கினர். கூட்டத்தில் கிளை துணைத்தலைவர் ஜஸ்டின், ஜோணி, பர்ணபாஸ், லூக்காஸ், கிளாடிஸ், ஆன்றனி ஜஸ்டஸ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

