முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பரிசளித்த ஆச்சரியப்படுத்திய கடையின் உரிமையாளர்

தனியார் பர்னிச்சர் கடை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கோடாங்கிபட்டியில் தனியார் பர்னிச்சர் நிறுவனத்தின் ஆறாவது கிளை இன்று தொடங்கப்பட்டது இந்த தொடக்க நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பர்னிச்சர் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்னர் தனியார் பர்னிச்சர் கடையில் உரிமையாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தங்க தமிழ்ச்செல்வனுக்கு புகைப்படத்தை ஒன்று பரிசாக அளித்தார் அதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் சந்திப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது அதனைப் பெற்றுக் கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் நான் ராஜ்யசபா எம்.பி யாக இருந்தபோது அப்துல் கலாமை சந்தித்ததாக பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார் பின்னர் கடையில் உள்ள பொருட்களை பார்வையிட்டு கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
Next Story