சித்தப்பாவால் கர்ப்பமான பிளஸ் டூ மாணவி

சித்தப்பாவால் கர்ப்பமான பிளஸ் டூ மாணவி
X
குளச்சல்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயசலிங்கம் (42) என்பவர் கடந்த ஐந்து மாதங்களாக வசித்து வருகிறார். இவரது மனைவியின் அக்கா வீடு மண்டைக்காடு பகுதியில் உள்ளது. ஜெயசலிங்கமும் அவரது மனைவியும் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயசலிங்கம் தனது மனைவியின் அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் 17 வயது மகள் பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜெயசலிங்கம் சிறுமியுடன் உல்லாசமாக இருக்க நினைத்து, வீட்டுக்குள்ளே வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தாயார் சிறுமியை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, போக்சோ பிரிவில் ஜெயசலிங்கம் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கு இடையே போலீஸ் தேடுவதை அறிந்த ஜெயசலிங்கம் தலைமறைமாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story