வீட்டை சூறையாடிய வாலிபர் கைது

வீட்டை சூறையாடிய வாலிபர் கைது
X
நித்திரவிளை
குமரி மாவட்டம் பூத்துறை பகுதியை சேர்ந்தவர் செல்வன் (36). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது முதல் மனைவி விகாரத்தை பெற்று சென்று விட்டார். இரண்டாவதாக தூத்தூரை சேர்ந்த ரோஜஸ் என்பவரின் தங்கையை திருமணம் செய்து உள்ளார். அதன் பிறகு ரோஜஸ், செல்வனை பார்க்கும் போதெல்லாம் எனது தங்கையை ஏமாற்றி திருமணம் செய்து விட்டாய் என்று கூறி திட்டுவாராம். இந்த நிலையில் சம்பவ தினம் மதியம் கம்பியுடன் செல்வன் வீட்டிற்கு சென்ற ரோஜஸ் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்த பைக்கை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். செல்வனை கம்பியை காட்டி மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து செல்வன் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரோஜஸ் (31) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story