பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம்

பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம்
X
ஹைகோர்ட் நீதிபதி திறப்பு
குமரியில் பத்மநாபத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடும்ப நல நீதிமன்றம் செயல்படுகின்றது. இங்கு அதிகமான வழக்குகள் உள்ளதால் விசாரணையில் தேக்க நிலை ஏற்படுகிறது. எனவே பத்மநாபபுரத்தில் நிரந்தரமாக குடும்ப நல நீதிமன்ற அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கம் அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ ராம் நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story