நெமிலியில் பொதுவினியோக திட்ட முகாம்

X
நெமிலி தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் வினோத் தலைமை தாங்கினார். இதில் பனப்பாக்கம், நெமிலி, ரெட்டிவலம், அகவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி, செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு மனு அளித்தனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். இதில் வருவாய் ஆய்வாளர் முருகன், இள நிலை உதவியாளர் மோனிஷ்குமார், என்ஜினீயர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

