ராணிப்பேட்டையில் மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

X
வேலூர் மின்பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்கிழமை மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான (ஜூன்) குறைதீர்வு கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை கோட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். இந்த தகவலை ராணிப்பேட்டை கோட்ட மின்வாரிய செயற்பொ றியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
Next Story

