ஏழை மாணவருக்கு கல்வி கற்க இலவச மடிக்கணினி

X
தோவாளையைச் சேர்ந்த சிவகுமார் - செல்வி தம்பதியினரின் மகன்கள் சிவராம் மற்றும் சிவசங்கர். இவர்களின் தந்தை இறந்து விட்டார். சிவராம் தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. இதனை அறிந்த என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இம்மாணவனுக்கு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கி கொடுத்து, இதற்குரிய கல்வி கட்டணத்தையும் செலுத்தி அக்குடும்பத்துக்கு உதவினார். மேலும் அவருக்கு தனது சொந்த செலவில் மடிக்கணினியை வழங்கினார். இதற்காக மாணவர், மாணவரின் தாயார் செல்வி, மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவருமான முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

