ஆரோக்கியபுரம் மக்கள் கடல் முற்றுகைப் போராட்டம்

ஆரோக்கியபுரம் மக்கள் கடல் முற்றுகைப் போராட்டம்
X
கடல் திட்டங்கள் கைவிட கேட்டு
குமரிமாவட்ட தெற்குக் கடல் பகுதியில் 27155 ச.கி.மீ. பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம், தனுஷ்கோடி முதல் மன்னார் வளைகுடா வரை கடலுக்குள் கனிம மணல் எடுக்கும் திட்டம், கிள்ளியூர் பகுதியில் 1144 ஹெக்டேர் நிலங்களில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டங்களை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும் என்று ஆரோக்கியபுரம் ஊர் மக்கள் கடலில் இறங்கிப் போராடினர். இப்போராட்டத்திற்கு ஆரோக்கியபுரம் பங்குப்பேரவை துணைத்தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கடலில் இறங்கியும் படகுகளை கடலில் இறக்கியும் கைகளில் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு கடல் எங்கள் தாயென்றால் கடற்கரை எங்கள் தாய்மடி அழிக்காதே அழிக்காதே கடலையும் கடற்கரையையும் அழிக்காதே வாழவிடு வாழவிடு கடலோடிகளை நிம்மதியாக வாழவிடு என்று முழக்கமிட்டு கடலை முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு செயற்குழு உறுப்பினர் ஜெயசுந்தரம், சிங்காரவேலர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஆனந்தன், பிரபாகரன், வாணியக்குடி ஆரோக்கியம் ஆகியோர் பேசினர். போராட்டத்தை முடித்துவைத்து குறும்பனை பெர்லின் பேசினார். முடிவில் ஆரோக்கியபுரம் பங்குத் பணியாளர் கிங்ஸ்லி சாஜூ நன்றி கூறினார்
Next Story