நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
மதுரை உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.கண்ணியம்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செயதியாளர்களிடம். பேசிய ஆர்.பி.உதயக்குமார்., முதலில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இப்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை, செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டார், காவலருக்கு பாதுகாப்பு இல்லை, இன்று காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. வீட்டில் ஒருவரை தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்க போய் புகார் அளிப்பது.
Next Story