கரூரில் கல்வி மற்றும் மருத்துவ உதவி வழங்கினார் செந்தில் பாலாஜி.

கரூரில் கல்வி மற்றும் மருத்துவ உதவி வழங்கினார் செந்தில் பாலாஜி.
கரூரில் கல்வி மற்றும் மருத்துவ உதவி வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. பொதுமக்கள் கரூர் எம்எல்ஏ அலுவலகத்திலும் , திமுக அலுவலகத்திலும் கல்வி உதவி கேட்டும், மருத்துவ உதவி கேட்டும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்படுகிறது. இந்த மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 607 மனுக்களுக்கு ரூபாய் 1.59 கோடி ரூபாய் நிதி உதவி நேற்று இரவு வழங்கப்பட்டது . கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுக்களின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதவித்தொகை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் , மாணவர்கள் , மாணவிகள் உதவித்தொகை வழங்கிய செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அணிகளைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story