ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகர் காமராஜர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் இன்று ஜீர்ணோத்தார் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் மங்கள இசை விசேஷச சந்தி இரண்டாம் கால பூஜை கோ பூஜை விமான மூலவர் பிரதிஷ்டை இரண்டாம் கால திரவிய ஆதி மகாபூர்ண தீப ஆராதனை மங்கள இசை விசேஷ சந்தி மூன்றாம் காலையாக பூஜை தீபலட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதிகளான போளூர் அல்லிநகர் குன்னத்தூர் ரெண்டேரிப்பட்டு மாம்பட்டு அத்திமூர் களியம் எழுவம்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story