உழவரைத் தேடி வேளாண் நலத்துறை திட்டம்

உழவரைத் தேடி வேளாண்  நலத்துறை திட்டம்
X
அகஸ்தீஸ்வரம்
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரம் நல்லூர் கிராமம் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிக்ச்சியில் விவசாயம் சம்மந்தமான அனைத்து துறைகளும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் சிறப்புரையா ற்றினர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ஜாய்லின் சோபியா தலைமை வகித்து தலைமையுரை வழங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்றிதழ் மற்றும் உயிர்ம சான்றிதழ்) ஷீபா விதை பண்ணை அமைப்பதை குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து தோட்டக்கலை உதவி அலுவலர் தர்மராஜ். பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் செல்லையா ,கால்நடை துறை உதவி ஆய்வாளர் சௌந்தரராஜன் அவரவர் துறைகளில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தநர். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கருத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தததைஅனைவரும் கண்டு மகிழ்தனர் .
Next Story