மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே சாலை மறியல்

X
திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் (தேவேந்திர குல வேளாளர்) ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 46 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதில் 8 குடும்பங்கள் ஊரில் திருவிழா நடத்தக்கூடாது என தடுத்து வருகின்றனர். மீதமுள்ள 36 குடும்பங்களும் திருவிழா நடத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக 8 நபர்களும் பிரச்சினை செய்தும் திருவிழா சுமுகமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வருடமும் இக்கோயிலின் திருவிழா 03.06.25 முதல் 05.06.25 என மூன்று நாள் நடைபெற்றது. 8 குடும்பத்தை சேர்ந்த நபர்கள் திருவிழா நடத்தக்கூடாது என வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த அமைதிப் பேச்சுவார்த்தை வடமதுரை காவல் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது 8 குடும்பங்களுக்கு ஆதரவாகவும், 36 குடும்பங்களுக்கு எதிராகவும் போலீசார் நடந்து கொள்கின்றனர். எங்களை 8 மணி நேரம் சிறை பிடித்தது போல் ஒரே இடத்தில் இருக்கும் படி கூறினார். மேலும், அனைவரும் மதம் மாறிவிடுங்கள் அப்போது இந்த பிரச்சனையை இருக்காது எனவும் ஒருமையிலும் திட்டினார். மேலும், மக்களின் வரிப்பணம் ரூ.45 ஆயிரம் செலுத்தி திருவிழாவில் நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகத்திற்காக அனுமதி கேட்டபோது பிச்சைக்காரர்களுக்கு போடப்பட்ட பணமாக நினைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். மேலும் பூசாரி மட்டுமே வைத்திருக்க வேண்டிய கோயில் சாவியை, 8 குடும்பத்தினருக்கும் தரும்படி தெரிவித்து வருகிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள சாலையில் அமர்ந்ததனர். உடனடியாக அங்கு காவலில் இருந்த காவலர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்த நினைத்தனர். அப்போது பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே 20 நிமிடம் காவல்துறையினருக்கும் கிராம பொதுமக்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 20 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியலால் மாவட்ட ஆட்சியர் வெளிய அமைந்துள்ள திண்டுக்கல் திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

