ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் படுகாயம்

ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் படுகாயம்
X
போலீசார் விசாரணை
சேலம் அடுத்துள்ள மொரப்பூர்-தோட்டம்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சென்ட்ரல்-பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது, தண்டவாளத்தை ஒட்டி வாலிபர் ஒருவர் கிடப்பதை என்ஜின் டிரைவர் கவனித்தார். அவர் உடனடியாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த வாலிபர் கிடப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயத்துடன் கிடந்த வாலிபர், அவ்வழியாக வந்த ஏதாவது ஒரு ரெயிலில் படிக்கட்டு பகுதியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம். இதனால் அவர் தலை உள்ளிட்ட பகுதியில் அடிப்பட்டு இருக்கலாம் எனவும், அடிப்பட்டதால் அவரால் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே கிடந்ததும் தெரியவந்தது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இருப்பினும் அவரது பெயர், ஊர் விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் அவரது பற்றிய விவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story