சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
X
26-ந் தேதி நடக்கிறது
சேலம் மேற்கு தபால் கோட்டத்தின் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள சேலம் மேற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே, ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் குறைகள் பற்றிய கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தபால்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story