அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை
X
திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு 19.06.2025 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்.
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கை மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 19.06.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படின், திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது கைபேசி எண்கள் (9894610168, 9499055762) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story