இப்படித்தான் முடி வெட்டுவியா ? வட மாநில நபருக்கு பளார்

X
Komarapalayam King 24x7 |16 Jun 2025 7:20 PM ISTகுமாரபாளையத்தில் இப்படித்தான் முடி வெட்டுவியா ?வட மாநில நபரை தாக்கிய நபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம் எதிர்மேடு சலூன் கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார், 34. இவரது கடையில் சாவேஸ், 18, என்ற வட மாநில நபர் பணியாற்றி வருகிறார். ஜூன் 11ல் காலை 11:00 மணியளவில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முடி திருத்தம் செய்திட வந்தார். சரியாக முடி திருத்தம் செய்யவில்லை என்பதால், இப்படித்தான் முடி வெட்டுவியா ? என்று கேட்டு முடி திருத்தம் செய்த, வட மாநில நபர் சாவேசினை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். மேலும் அந்த நபர் தன் நண்பர்களையும் வரவழைத்து கொலை மிரட்டல் விடுத்தார் என, மேலாளர் தினேஷ்குமார், குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வட மாநில நபரை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.
Next Story
