ஹனுமான் கோவில்களில் சிறப்பு வழிபாடு

X
Komarapalayam King 24x7 |16 Jun 2025 7:25 PM ISTஆனி மாத முதல் ஞாயிறு நாளையொட்டி குமாரபாளையம் ஹனுமான் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆனி மாத முதல் ஞாயிறு நாளையொட்டி திருவள்ளுவர் நகர் சவுந்தரராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தி பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் உள்ள ஹனுமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story
