அப்பிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

அப்பிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
அப்பிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் , தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பி பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று அந்த பணிகளை இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி துவங்கி வைத்தார். இதில் அப்பி பாளையம் ஊராட்சி செட்டிபாளையம் நியாய விலை கடை முதல் - குண்டலீஸ்வரர் கோவில் வரை மின் கம்பங்களுடன் கூடிய திருவிளக்கு அமைக்கவும் , அப்பி பாளையம் ஊராட்சியில் மெயின் ரோடு முதல் பாலத்து புதூர் சுடுகாடு வரை சிமெண்ட் சாலை அமைக்கவும், ராசாபுரம் 2-வது தெரு ,அப்பி பாளையம் காலனி 9வது தெரு,செட்டிபாளையம் 2வது தெரு பகுதிகளில் அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2025 -26 திட்டத்தில் ரூபாய் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜைகள் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story