மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

X
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி மதுரை ரோடு கீழ நாகமங்கலத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் திடீரென்று மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாப்பான ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மட்டும் தனியாக வசித்து வருவதாகவும் தனது வீட்டிற்கு முறையாக வீட்டு வரி தண்ணீர் மின்கட்டணம் கட்டி வரும் நிலையில் பட்டா வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் 2000 பணம் லஞ்சம் கேட்கிறார் என மனம் உடைந்து தீக்குளிக்க முயற்சி செய்தேன் என கூறினார். இடத்தை போலீசார் அவர் நீ சமர்ப்படுத்தி மனு கொடுக்க வைத்து விட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.
Next Story

