சாதனை படைத்த மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கிய அமைச்சர்

X
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, தமிழ்நாடு அரசு வழங்கிய நீட் பயிற்சியில் பயிற்சி பெற்று இளங்கலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள மாணவிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

