சிவகாசி பேருந்து நிலையத்தில் குடிநீர், இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு...

X
சிவகாசி பேருந்து நிலையத்தில் குடிநீர், இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு... தொழில் நகரமான சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து கோவை, மதுரை, திருப்பூர், திருச்செந்தூர், ரமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள், குடிநீர், கழிப்பறை, சேதமடைந்த தரைதளம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் தரையில் அமரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பேருந்து நிலையம் இதுவரை தரம் உயர்த்தப்படாமல் உள்ளதால் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

