அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கல்

X
Rasipuram King 24x7 |16 Jun 2025 8:28 PM ISTஅதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கல்
கழக பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கடந்த பத்தாண்டு கால கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல திட்டங்களை கடந்த நான்காண்டு கால விடியா திமுக அரசின் அவல நிலைகள் சட்ட ஒழுங்கு சீர்கேடு போதை பொருட்கள் விற்பனை பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவைகளை விளக்கியும் தெருமுனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை சார்பில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சீராப்பள்ளி பேரூர் பகுதி முழுவதும் வீடு வீடாக சென்றும், மற்றும் வணிகர்கள் ஆகியோர் இடத்தில் விநியோகித்து தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இ.ஆர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும் குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசியதாவது இந்த நான்காண்டு காலம் தமிழகத்தில் ஒரு இருண்ட காலமாக அனைத்து தரப்பு மக்களும் கஷ்டப்படுகின்ற வகையில் எங்கே பார்த்தாலும் கள்ளச்சாராயம், கஞ்சா, கொலை, கொள்ளை என்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சிதான் இன்றைய திமுக ஆட்சி. இந்த நான்காண்டு காலத்தில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டோம் என்று சொல்லிவிட்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்பனையாகிக் கொண்டிருக்கிறது பள்ளி கல்லூரிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத சூழ்நிலை அதேபோல கொலை, கொள்ளை என்று நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. ஆக இதையெல்லாம் கண்டித்து தான் எடப்பாடியார் அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும், ஆகையால் பேரவையின் சார்பாக நேரடியாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய ஆணையிட்டு இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 18 ஆவது வாரமாக இன்று சீராப்பள்ளியில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் பத்து மாத காலத்தில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பாக மக்கள் எழுச்சி உடன் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆக இந்த ஆட்சியைப் பொறுத்தவரை யாருக்கும் ஒரு ஆதரவு இல்லாத ஆட்சியாக தான் இருந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்து இருக்கின்றோம் என்று சொல்வார்கள் ஆனால் இன்று விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு கூடுதலாக இன்னும் ஆயிரம் ரூபாய் செலவாகிக் கொண்டிருக்கிறது வகையில் தான் இருக்கிறது. அதேபோல விலைவாசி மட்டுமல்ல இந்த மாவட்டத்தில் நான்காண்டு காலத்தில் ஏதாவது வளர்ச்சி திட்டங்களை செய்து இருக்கிறார்களா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் பத்தாண்டு காலம் இருந்த பொழுது இந்தப் பகுதியில் இருக்கின்ற அத்தனை தரப்பு மக்களும் இங்கே கலைக் கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம், அதேபோல புறவழிச் சாலை கொண்டு வந்திருக்கிறோம், சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி அதேபோல திருச்செங்கோட்டில் இருந்து ஆத்தூர் செல்லுகின்ற சாலை என்று பல்வேறு சாலைகளை நாங்கள் போட்டிருக்கிறோம். அதேபோல அடிப்படை வசதிகளையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இவர்கள் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு, வீட்டு வரியை உயர்த்தி விட்டு, வருடத்திற்கு ஆறு சதவீதம் உயரும் என்று தேர்தல் நேரத்தில் எந்த கட்டணத்தையும் நாங்கள் உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு இன்றைய தினம் அனைத்து தரப்பு மக்களும் கஷ்டப்படுகின்ற வகையில் அத்தனை வரிகளையும் உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். பொங்கல் பரிசுத் தொகையாக அம்மா அவர்கள் இருக்கின்ற பொழுது பொங்கல் தொகுப்பையும் கொடுத்து கையில் 100 ரூபாயும் கொடுத்தார்கள். அதன் பிறகு எடப்பாடி யார் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் அதன் பின்பு 2000 ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பொங்கல் தொகுப்பு தருகிறோம் என்று சொல்லி மிளகுக்கு பதிலாக பப்பாளி விதைகளை எல்லாம் போட்டுக் கொடுத்தார்கள் என்பது எப்படி இருந்தது என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற பொழுது பொங்கல் பரிசை கொடுத்தார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பரிசை கொடுக்கவில்லை நாங்கள் சட்டமன்றத்தில் கேட்ட பொழுது தேர்தல் இல்லை தேர்தல் வரும் பொழுது குடுப்போம் என்று கூறுகிறார்கள். நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதிமுக சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா என்ற நிலைமையை காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. எனது நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் காவலரை அடித்து உள்ளனர். காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய ஆட்சி காலத்தில் காவல்துறையினருக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்திருந்தோம். காவல்துறையினரின் அதிகாரத்தை திமுகவினர் எடுத்துக் கொண்டதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை பின்பு மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். இவர்களை நம்பி நாம் வாக்களித்தோம் என்று சொன்னால் நம்முடைய எதிர்காலம் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கே இருக்கின்ற வார்டு உறுப்பினர் பகுதி மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தர முடியவில்லை என்று என்னிடம் கூறுகிறார். நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பேரூராட்சிக்கு வருகின்ற நிதி எங்கே செல்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வாக வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது என்று சொன்னால் உங்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இருக்காது, யாருடைய சொத்துக்களையும் அபகரித்துக் கொள்வார்கள், போதைப் பொருட்கள் விற்பனை இன்னும் அதிகமாகிவிடும், அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி வந்தால் தான் தமிழகத்திற்கு ஒரு நல்லாட்சி இருக்கும், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைப்போம் என்று இந்த நேரத்தில் நாம் உறுதி ஏற்றுக்கொண்டு இந்தப் பகுதியை பொறுத்தவரை இந்த கடந்த 10 ஆண்டு காலத்தில் அத்தனை திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். அதேபோல மக்களும் பாதுகாப்பாக இருந்தார்கள். கொலை கொள்ளை என்று அதுவும் கிராமப் பகுதிகளில், காட்டுப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி 69 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல போதை பொருள் என்று தமிழகமே இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக என்று சொல்லுகின்ற அளவிற்கு கேட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்று கூறுகிறார். போதைப் பொருளில் முதலிடம் கொள்ளை அடிப்பதிலே முதலிடம், அதே போல கொலை, கொள்ளை என்பதை பார்த்தீர்கள் என்றால் இந்த தமிழகத்திலே சட்டம் ஒழுங்கே இல்லாத நிலைமை, அதுவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை அதே போல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றோம். என்று சொன்னால் அங்கே இருக்கின்ற ஆசிரிய பெருமக்களே சீரழிக்கின்ற நிலைமை இந்த ஆட்சியில் இருக்கின்றது என்று சொன்னால் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுகின்ற காலம் தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே அனைத்திந்திய அண்ணா திராவிட ுன்னேற்ற கழகத்திற்கு பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அம்மா அவர்களின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைப்போம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறி உள்ளார். இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே பி எஸ் சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.பி.எஸ் சுரேஷ் குமார், மாவட்ட வர்த்தக அணி இணைச் ஸ்ரீ தேவி பி மோகன், சீராப்பள்ளி பேரூர் கழகச் செயலாளர் செந்தில்குமார், நாமகிரிப்பேட்டை பேரூர் கழகச் செயலாளர் மணி கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, , சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கலாவதி, ராசிபுரம் நகரக் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story
