ராஜபாளையத்தில் நேற்று ஒலிபெருக்கி அமைப்பாளர் சோலை ராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று ஒலிபெருக்கி அமைப்பாளர் சோலை ராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்த ஒலிபெருக்கி அமைப்பாளர் சோலை ராஜ் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் (22), கருப்பசாமி பாண்டி (17) மற்றும் கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்த பெருமாள் சாமி (23) ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் குடிபோதையில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story

