ராஜபாளையத்தில் இயங்கும் சிஎஸ்ஐ தேவாலய மத போதகர் ஜான் கமலேசன் மீதான முறைகேடுகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவாலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கும் சிஎஸ்ஐ தேவாலய மத போதகர் ஜான் கமலேசன் மீதான முறைகேடுகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவாலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் இயங்கும் சிஎஸ்ஐ தேவாலய மத போதகர், ஜான் கமலேசன் என்பவர் தேவாலய நிர்வாக வரவு செலவு கணக்குகளில் பணம் ரீதியாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் திருச்சபை குறித்து பல்வேறு அவதூறுகள் பரப்பி வருவதாகவும் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலில் தனக்கு ஆதரவாக எட்டு நபர்களை மட்டும் தேர்வு செய்ததாகவும், தேவாலய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனு தாக்கல் செய்த பெரும்பாலானவர்களின் மனுக்களை காரணம் இன்றி நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் மதுரை, ராமநாதபுரம் தேவாலய உயர் நிர்வாகத்தினருக்கு புகார் அளித்தும் மதபோதகர் ஜான் கமலேசனை இடமாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவாலய வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெறும் ஆராதனைக்கு போதகர் ஜான் கமலேசனுக்கு பதிலாக வந்த மற்றொரு போதகர் ஜோதி மணி என்பவரை பொதுமக்கள் ஊழியம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதால் இன்று தேவாலயத்தில் ஆராதனை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

