நிதிநிறுவனத்தை இழுத்துப் பூட்டி, மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்.

நிதிநிறுவனத்தை இழுத்துப் பூட்டி, மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்.
X
வங்கி ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1030 ரூபாய் Overdue ஆகி இருக்கலாம் இன்று மாலைக்குள் இப்பிரச்சனையை சரி செய்து உங்கள் கணக்கை நேர் செய்கிறோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து வாங்கிக் கதவை ஆனந்த் திறந்து ஊழியர்களை விடுவித்து இருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆனந்தன்(34) டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமான “இண்டஸ்இண்ட் வங்கி" கிளையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடன் பெற்று ஒரு காசோலை கூட பவுன்ஸ் ஆகாமல் முறையாக தவணைத் தொகைகளை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்னர் தான் வாங்கிய இரு சக்கர வாகனத்திற்கு மேற்கண்ட இண்டஸ்இண்ட் வங்கி" கிளையில் 94 ஆயிரத்து 950 ரூபாய் கடனாக பெற்ற ஆனந்த் ஒரு மாதத்திற்கு 9 ஆயிரத்து 635 ரூபாய் வீதம் கடந்த 7 மாதங்களாக தவணையை ECS முறையில் சரிவர செலுத்தி வந்த நிலையில். 1.030 ரூபாய் ஓவர் டியூவ் தொகை செலுத்த வேண்டுமென வங்கி ஊழியர்கள் செல்போன் மூலம் ஆனந்தை தொடர்பு கொண்டு நாள் தோறும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதோடு, CIBIL SCOREயை (கடன் வாங்கும் தகுதியை) சீர்குலைப்பதாக குற்றம் சாட்டி, வங்கி மேலாளர் உள்ளிட்ட 7 பேரை உள்ளே சிறை வைத்து வங்கியை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1030 ரூபாய் Overdue ஆகி இருக்கலாம் இன்று மாலைக்குள் இப்பிரச்சனையை சரி செய்து உங்கள் கணக்கை நேர் செய்கிறோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து வாங்கிக் கதவை ஆனந்த் திறந்து ஊழியர்களை விடுவித்து இருக்கிறார். பின்னர், இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாருக்கு பதிலளித்த நிதி நிறுவனத்தினர் இன்று மாலைக்குள் Overdue பிரச்சனையை சரி செய்து விடுவதாக உறுதி அளித்துள்ளனர். கடனை வலுக்கட்டாயாக வசூலித்தால் பிணையில் வெளியே வர முடியாத 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், வலுக்கட்டாய கடன் வசூல் மனமுடைந்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், கடனை வழங்கிய நிறுவனத்தின் மீது தற்கொலை தூண்டியதாக கருதப்படும் என்றும், கடன் பெற்றவர்களையோஅவரது குடும்பத்தினரையோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிரட்டுவோ பின் தொடரவோ அல்லது அவர்களை சொத்துக்கள், உடைமைகளை பறிக்கவோ கூடாது என்றும், கடன் பெறுவருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாய்அரசு நியமிக்கலாம் என்றும், கடன் வசூல் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிற நிலையில், பெற்ற கடனை 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து முறையாக செலுத்தி வந்த தனியார் நிதி நிறுவன வாடிக்கையாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஓவர்டிவ் கட்ட வேண்டும் என நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை இழுத்துப் பூட்டி நிதி நிறுவன ஊழியர்களை சிறை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரம்பலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story