அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
X
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ சிகிச்சை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில்தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் மருத்துவ சிகிச்சை பெறும் என் ஹச் ஐ எஸ் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவ காப்பீடு திட்டம், உயிர்காக்கும் உன்னத திட்டம் , ஆகியவை முழுமையாக அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை, தொழிலாளர்களை சென்று அடையவில்லை. இந்நிலையில் இத்திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்து மறுபரிசீலனைக்கு வரும் நிலையில் இதில் உள்ள குறைபாடுகளை கலைந்து அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவும், மாவட்ட கருவூல அலுவலர் மூலமாகவும், கருவூல ஆணையர் மூலமாகவும் பெருந்திரள் முறையீடு கடிதத்தினை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாக திறனற்ற ஸ்டாலின் அரசு. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கை செவி சாய்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story