சங்கரன்கோவில் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை -கணவன் கைது

X
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் (32), யூனியன் அலுவலக காவலாளி, மனைவி முத்துகுமாரி (28). முத்துப்பாண்டியன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டது. முத்துப்பாண்டியனின் அவதூறு பேச்சால் மனமுடைந்த முத்துகுமாரி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தகவல் இருந்தா போலீசார் விரைந்து சென்று முத்துகுமாரி உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்ன கோவிலா குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியனை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

