ஊத்துமலையில் பூ வியாபாரி வெட்டிக் கொலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் ஊத்துமலையைச் சோ்ந்த காளிமுத்து மகன் சுடா் வடிவேல்(52). அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே பூக்கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி தவ மாரியம்மாள், மகள்கள் கவிதா, செல்வி மற்றும் உள்ளனா். மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறாா். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் செல்விக்கு 4 நாள்களுக்கு முன்பு பாம்பு கடித்ததால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு உதவியாக தவ மாரியம்மாள் இருந்து வந்தாா். வீட்டில் தனியாக இருந்து வந்த சுடா் வடிவேல் இரவு வேலையை வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை 4 போ் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் வெட்டினராம். அவா்களிடமிருந்து தப்பிக்க வெளியே ஓடிய அவரை, துரத்திச் சென்று அங்குள்ள கடை முன்பு வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினராம். இச்சம்பவம் நிகழ்ந்தது திங்கள்கிழமை காலையில் தான் தெரிய வந்தது. ஊத்துமலை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீஸாா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டன.
Next Story

