சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில்,மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களுடன் இணைந்து, புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 32 சிற்றுந்து (MINI BUS) வழித்தடங்களுக்கான அனுமதி ஆணைகளை வழங்கி பேருந்து சேவையை கொடியசைத்து நேற்று (ஜூன்.16) மாலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள், மாநகராட்சி மேயர் .இந்திராணி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவர்கள் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story




