ஆணி ஊஞ்சல் உற்சவம் அறிவிப்பு

ஆணி ஊஞ்சல் உற்சவம் அறிவிப்பு
X
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆணி ஊஞ்சல் உற்சவம் வரும் 30ம் தேதி தொடங்குகிறது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 30 முதல் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் நாட்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு ஏழுந்தருள்வார் அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்படும் அதன்பிறகு தீபாரானை முடிந்து 2–ம் பிரகாரம் சுற்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடை பெறும். இதேபோல ஆனி மாத பவுர்ணமி தினமான 10–ந்தேதி உச்சிகால வேளையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனியால் அபிசேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து மாலை 7 மணியளவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு நடைபெறும்.
Next Story