கோவை: சாலையில் மயில் ஆட்டம் - கண்கொள்ளாத காட்சி வைரல்!
கோவையில் மழை நேரத்தில் சாலையில் மயிலொன்று தோகையை விரித்து ஆடிய ரம்யமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காளப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகே, மண் சாலையில் சாரல் மழை ஓய்ந்ததும், மயிலொன்று தனது இணையை ஈர்க்கும் வகையில் தோகையை விரித்து ஆடியது. அதை வீடியோவாக படம் பிடித்த ஒருவர் “முருகா... திரும்பு!” என கூறும் நிலையில், மயில் திரும்பி தோகையை விரிக்கும் அழகிய நிமிடம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி, பலரது ரசனையையும் பெற்றுள்ளது.
Next Story



