மண்மலை கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்

X
கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை கிராமத்தில் கருப்பனார், அங்காளம்மன், விநாயகர் கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், சுவாமி சிலைகள் பிரதிஷ்டையுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 4:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின், இரண்டாம் கால பூஜையுடன் கடம் புறப்பாடாகி 20 அடி உயர கருப்புசாமி சிலைக்கும், தொடர்ந்து அங்காளம்மன், விநாயகர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

