ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி

X
திருவட்டார் : ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு(இந்து சேனா) சார்பில் உழவாரப்பணி 108 வைணவத்திருத்தலங்களில் 76வது புண்ணிய திருத்தலமாக விளங்குவது குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஆகும். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச்சுற்றி ஓடும் புண்ணிய ஆறான பரளி ஆறு அருவிக்கரை சப்த கன்னிகை, கோவிந்தம், அமிர்தம், ராமம், திருப்பாதக்கடவு, சக்கரம் புண்ணிய தீர்த்தங்கள் என்ற பெயரில் ஆறு இடங்களில் அருள் பாலிப்பதாக ஐதிகம். வரும் தலை முறையினர் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும்,தூய்மையாக வைத்திருக்கவும், போற்றவும், ஜீவ நதிகளை நிலைபெறச்செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை மையமாகக்கொண்டு மஹா ஆரத்தி பெருவிழா வரும் ஜூன்.24.ந்தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணி முதல் நடக்கிறது. இதற்காக நேற்று முன் தினம் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மேற்குவாசல் பகுதியில் பரளியாறு ஓடும் பகுதியில் உள்ள படித்துறை மற்றும் ஆரத்தி நடைபெறும் பகுதிகளில் வளர்ந்திருந்த புதர்கள், செடிகளை அகற்றினர். இந்த உழவாரப்பணியில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் 40 பேர் கலந்து கொண்டனர்.
Next Story

