போலீசாருக்கு தெரியாமல் பள்ளி மாணவியின் சடலம் எரிப்பு

X
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சின்னையா ( 40). இவருடைய மனைவி சின்ன பொண்ணு. இவர்களது மகள் பொன்னழகு (16). என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூன் .15) மாணவி பொன்னழகு திடீரென உயிரிழந்து விட்டதாக தெரிகிறது இந்தநிலையில் இவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கொட்டாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவியின் தாய் சின்னப் பொண்ணு, தந்தை சின்னையா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

