கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

X
சேலத்தில் கூட்டுறவு துறை சார்பில், கூட்டுறவு சங்கங்களில் பணியில் இருந்த போது, இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

