சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X
செயற்பொறியாளர் தகவல்
வேம்படிதாளம், எடப்பாடி, மல்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அன்பரசன், தமிழ்மணி, சுந்தரராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்திநகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. எடப்பாடி அருகே உள்ள குரும்பப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ** வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூர், தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story