தென்னிலையில் சாதாரண கல் மற்றும் கிராவல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தென்னிலையில் சாதாரண கல் மற்றும் கிராவல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
தென்னிலையில் சாதாரண கல் மற்றும் கிராவல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுக்கா , தென்னிலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 10.50 - ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள கல் மற்றும் கிராவல் குவாரிக்கு பொதுமக்களிடையேகருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயக்குமார்,தென்னிலை கிராம சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் , சுற்றுச்சூழல் ஆர்வளர்கள், காவல்துறையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அப்பகுதியில் குவாரி அமைந்தால் கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு உருவாகும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். அதேசமயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் , சமூக ஆர்வலர்களும் இந்த குவாரி அமைய உள்ள இடத்தின் அருகாமையிலேயே குடியிருப்பு பகுதிகள் , அரசின் போர்வெல்கள்,உயர் மின்னழுத்த பாதை உள்ளிட்டவை அப்பகுதியில் உள்ளதால் குவாரி அமைக்க கூடாது எனவும்,ஏற்கனவே தென்னிலை பகுதியில் பல குவாரிகள் செயல்பட்டு வருவதால் இந்த புதிய குவாரி தேவை இல்லை எனவும் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்துக்களை பதிவு செய்த அதிகாரிகள் , இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை சென்னையில் உள்ள மாசு கட்டப்பட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு காணப்பட்டது.அதேசமயம் காவல்துறையினர் கூட்டத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story