மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நீதிபதி

X
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகேயுள்ள ஒருபொறியியல் கல்லூரியில் கடந்த 2018ஆம் ஆண்டில் இஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சார்ந்த மாணவர் ஒரு தனது குடும்ப காரணமாக படிப்பை தொடர முடியாத சூழ்நிலையினால் 2019-ஆம் ஆண்டுபடிப்பை நிறுத்தினார். பின்னர் 2020- ஜுலை மாதம்கல்லூரி நிர்வாகத்திடம் தனது கல்விச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் நிலுவை கட்டணமாக ரூ.45,000/- செலுத்தினால்தான் சான்றிதழ்களை கொடுக்க முடியும் எனக்கூறி மாணவனின் கல்விச் சான்றிதழ்களை கொடுக்க மறுத்துள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை தர மறுத்த நிலையில், மாணவன் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு கடந்த மே மாதம்தனது அசல் சான்றிதழ்களை பெற்றுதரக்கோரி மனு அனுப்பியுள்ளார். பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர்/ நீதிபதி கார்த்திகேயன் உத்தரவுப்படி, சட்டத் தன்னார்வலர் பரமேஸ் மூலம் கல்லூரி முதல்வருக்கு நேற்றுநேரில் ஆஜராகும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுபூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின்முன் ஆஜரான கல்லூரியின் அலுவலக எழுத்தர்மாணவனின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் பொறியியல்சான்றிதழ்கள் ஆகியவற்றை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பூதப்பாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியுமாகிய கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். நீதிபதி அதை சம்பந்தப்பட்ட மாணவனிடம்வழங்கினார்.
Next Story

