ராணிதோட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

X
குமரி மாவட்டம் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணி நேரத்தில் தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துகிற போக்குவரத்து அதிகாரியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பு தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக எஸ். எம்.எஸ். மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து கொண்டு பேசினார்.
Next Story

