கணினி வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதல் வழங்கும் விழா..

X
Rasipuram King 24x7 |17 Jun 2025 3:40 PM ISTகணினி வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதல் வழங்கும் விழா..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற முன்னணி IT நிறுவனமான YELLOW EDUSOFT நிறுவனம் கடந்த ஏப்ரல் - மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு Summer AI - Computer course 2.0 (BASIC COMPUTER FUNDAMENTALS, MS WORD , MS EXCEL , MS POWERPOINT, ARTIFICIAL INTELLIGENCE, EMAIL COMMUNICATION, ENGLISH TYPING, EFFECTIVE PUBLIC SPEAKING, PERSONALITY DEVELOPMENT, COMMUNICATION SKILLS) மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக INTERNSHIP PROGRAM மேலும் நாமக்கல் மாவட்டம் JSS மக்கள் கல்வி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசின் SKILL INDIA - Computer Operator Course என அனைத்தையும் திறன்பட நடத்தினர் தலைமை மேலாளர் P. தாரணி. அதில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கணினி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இங்கு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதல் வழங்கும் விழா ஞானமணி இன்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவை YELLOW EDUSOFT, Founder & CEO என்ஜினீயர் திரு. T. மோகன் குமார் மற்றும் YELLOW EDUSOFT team இணைந்து நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக திரு.கை. பெரியசாமி , Deputy Inspector of Schools, நாமக்கல் மாவட்டம், மேலும் கவுரவ விருந்தினராக Dr. A. வெங்கடேஷ், EEE துறை உதவி பேராசிரியர், ஞானமணி காலேஜ், மற்றும் அழகி போட்டியில் Mrs. South India & Mrs. TamilNadu & Mrs. Salem பட்டத்தை வென்ற திருமதி. T. கௌசல்யா, மற்றும் நாமக்கல் மாவட்டம் JSS மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பாக திரு வடமலை அவர்களும் கலந்து கொண்டு, அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதல்களை வழங்கி கவுரவ படுத்தினர். மேலும் இவ்விழாவில் 2024 இன் Lawyer Association தலைவர் R. சதீஷ்குமார், மற்றும் JCI, JCOM உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலம் விரும்புபவர்கள், மாணவர்கள் என 100- கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
Next Story
