கருர் -பட்டப் பகலில் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளை.
கருர் -பட்டப் பகலில் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளை. காவிரி ஆற்றில் பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெற்று வந்ததை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் அடிப்படையில் காவிரி ஆற்றில் மணல் அள்ள மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி அரசியல் பின்புலத்துடன் அதிகாரிகளை வளைத்து மணல் மாபியாக்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சமூக வலைத்தளத்தில் கரூரை அடுத்த திரு முக்கூடலூர் பகுதியில் பட்டப் பகலில் ஹிட்டாச்சி இயந்திரத்தை பயன்படுத்தி நடைபெற்று வரும் மணல் கொள்ளை குறித்து.சமூக ஆர்வலர்கள் புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மணல் கொள்ளையை தடுக்க சமூக அலுவலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story





