காப்பீடு அட்டை மூலம் அறுவை சிகிச்சைகளை செய்ய மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் பொதுமக்கள் அவதி

X
Komarapalayam King 24x7 |17 Jun 2025 5:11 PM ISTகாப்பீடு அட்டை மூலம் அறுவை சிகிச்சைகளை செய்ய மறுக்கும் தனியார் மருத்துவமனைகளால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
காப்பீடு அட்டை மூலம் அறுவை சிகிச்சைகளை செய்ய மறுக்கும் தனியார் மருத்துவமனைகளால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது குறித்து மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது: ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையம் பகுதியில் வசிப்பவர் கண்ணன், 58. கூலி. இவருக்கு ஜூன் 7ல் மாரடைப்பு ஏற்பட்டது. கரூர் தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று காட்டிய போது, அவருக்கு, இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். காப்பீடு அட்டை மூலம் சிகிச்சை செய்ய மறுக்கவே, கோவை தனியார் மருத்துவமனையில் கேட்டுள்ளனர். அவர்களும் காப்பீடு அட்டை மூலம் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்லியும், மருத்துவமனை நிர்வாகம் இவரை, டிஸ்சார்ஜ் செய்வதாக அறிவித்தது. மேலும் சிகிச்சை செய்த வரையில் பணம் செலுத்தி விட்டு அழைத்து செல்லுங்கள் என்றும் கூறியது. குமாரபாளையம் அவரது குடும்பத்தினர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்றுதான், அரசு சார்பில் மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதனை செயல்படுத்த மறுப்பதால், எங்களைப் போன்ற எண்ணற்ற பொதுமக்கள், சிகிச்சை செய்திட வழியின்றி பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இப்போது அறுவை சிகிச்சை செய்யவும் முடியாமல், மருத்துவமனை விட்டு வெளியில் செல்லவும் முடியாத நிலையில் உள்ளோம். இது போன்ற தனியார் மருத்துவமனைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
