முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு சிறப்பு ரயில்

X
மதுரை வண்டியூரில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் 21ம் தேதி இரவு 7.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5.40 மணிக்கு மதுரைக்கு சென்றடையும் மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக நெல்லைக்கு 22 ம் தேதி காலை 8.45 மணிக்கு சென்றடையும் நெல்லையில் அன்று இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 23ம்தேதி காலை 8.15 மணிக்கு சென்னைக்கு சென்றடையும் என்று அறிவித்துள்ளது.
Next Story

