வேளாண் இயந்திரங்கள் குறித்த மாவட்ட அளவிலான முகாம்

வேளாண் இயந்திரங்கள் குறித்த மாவட்ட அளவிலான முகாம்
X
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். மேலும், உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) திண்டுக்கல், கண்ணதேவனி, அனைவரையும் வரவேற்றார். செயற்பொறியாளர் (வே.பொ), சவுந்தரராஜன் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்விளக்கம் குறித்து முன்னுரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன் இம்மேளா குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும், இம்முகாமில் தோட்டக்கலை துணை இயக்குநர், காயத்ரி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப்பொறியாளர் (வே.பொ)கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், விவசாயக் கல்லூரி மாணவர்கள், விவசாயக் கல்வி பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர். மேலும், இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வழங்கப்பட்டது. வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களான சோளம் அறுவடை இயந்திரம், துளையிடும் கருவி, விதையிடும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, இறகு வார்ப்புக் கலப்பை மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story